கார்டியோலா: சிட்டிக்குக் கடுமையான சவால் காத்திருக்கிறது

கார்டியோலா: சிட்டிக்குக் கடுமையான சவால் காத்திருக்கிறது

1 mins read
cd12b279-6069-4a7a-ad2b-a6bb76afa620
மான்செஸ்டர் சிட்டி நிர்வாகி பெப் கார்டியோலா - படம்: ராய்ட்டர்ஸ்

மான்செஸ்டர்: இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்துப் போட்டியின் லீக் பட்டத்தைத் தொடர்ந்து நான்காவது முறையாகக் கைப்பற்ற மான்செஸ்டர் சிட்டி இலக்கு கொண்டுள்ளது.

ஆனால் மீண்டும் மகுடம் சூடுவது எளிதல்ல என்றும் பல தடைக்கற்கள் உள்ளன என்றும் சிட்டியின் நிர்வாகி பெப் கார்டியோலா தெரிவித்துள்ளார்.

இன்னும் நான்கு ஆட்டங்கள் எஞ்சியுள்ள நிலையில், எது வேண்டுமானாலும் நடக்கலாம் என்றார் அவர்.

நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்றால் மட்டுமே லீக் பட்டத்தைக் கைப்பற்ற முடியும் என்றார் அவர். அவற்றில் ஓர் ஆட்டத்தில் சமநிலை கண்டாலும் லீக் பட்டக் கனவு கலைந்துவிடும் என்று கார்டியோலா கூறினார்.

சிட்டி அதன் அடுத்த ஆட்டத்தில் உல்வ்ஸ் அணியுடன் மோதுகிறது.

குறிப்புச் சொற்கள்