கமல்ஹாசனின் வர்ணனையில் தமிழர் வரலாறு குறித்த முப்பரிமாண நிகழ்ச்சி நேற்று தமிழகத்தில் நடைபெற்ற அனைத்துலக சதுரங்க ஒலிம்பியாட் தொடக்க விழாவில் இடம்பெற்றது.
மிகவும் பிரமாண்ட முறையில் நடந்தேறிய இந்த நிகழ்ச்சி தமிழரின் கலை, வாழ்வியல், சாதனைகள், சோழர் பரம்பரையின் பெருமைகளை எடுத்துரைத்தது.
இது உலக மக்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது.
அனைத்துலக சதுரங்க ஒலிம்பியாட் போட்டியை பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
முழு நிகழ்ச்சியையு இந்த இணைப்பில் காணலாம்
தொடக்க விழாவில் பல்வேறு நாடுகளின் அணித் தலைவர்கள் கொடியுடன் அணிவகுப்பு நடத்தினர். நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தனர். இம்முறை சதுரங்க ஒலிம்பியாட்டில் பங்கேற்க 187 நாடுகளில் இருந்து 2,000க்கும் மேற்பட்ட சதுரங்க வீரர்கள், வீராங்கனைகள் மாமல்லபுரத்தில் முகாமிட்டுள்ளனர்.
கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற இளம் இசைக்கலைஞர் லிடியன் நாதஸ்வரம் கண்ணைக் கட்டிக்கொண்டு பியானோ வாசித்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். வரவேற்புரைக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனின் குரலில் தமிழ் வரலாறு குறித்த முப்பரிமாண நிகழ்ச்சி அரங்கேறியது. இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த பாடலும் ஒலிக்கப்பட்டது.

