போதிய பயணிகள் இல்லாததால் 10 விமானச் சேவைகள் ரத்து

போதிய பயணிகள் இல்லாததால் 10 விமானச் சேவைகள் ரத்து

1 mins read
0b7c0fd4-5c7a-449e-8c8a-0e749cc844f1
படம்: - பிக்சாபே

ஆலந்தூர்: போதிய அளவில் பயணிகள் இல்லாததால் இலங்கை, பெங்களூர், மும்பை, மதுரை, அந்தமான் உள்ளிட்ட மொத்தம் 10 இடங்களுக்கு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதாகச் சென்னை விமான நிலைய அதிகாரிகள் வெள்ளிக்கிழமை (அக்டோபர் 4) தெரிவித்தனர்.

இதுகுறித்து பயணிகளுக்கு முன்னதாகவே தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும் பயணிகளின் விமானப் பயணச்சீட்டுகள் வேறு விமானங்களுக்கு மாற்றிக் கொடுக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.

இதனால், பயணிகள் பெரிய அளவில் சிரமங்கள் எதையும் எதிர்கொள்ளவில்லை என்றும் அவர்கள் குறிப்பிட்டனர்.

சென்னை விமானநிலையத்தில் அக்டோபர் 4ஆம் தேதி ஒரே நாளில், போதிய பயணிகள் இல்லாமலும் நிர்வாகக் காரணங்களாலும் ஐந்து வருகை அளிக்க வேண்டிய விமானங்கள், 5 புறப்பாடுச் செல்ல வேண்டிய விமானங்கள் என மொத்தம் 10 விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.

குறிப்புச் சொற்கள்