பெங்களூரு: கர்நாடக மாநிலம், ஹாசன் மாவட்டம், சென்னராயப்பட்டணத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி பிருத்வி, ஒரே நிமிடத்தில் 10 கடினமான யோகாசனங்களை பார்வையாளர்களிடம் செய்து காட்டி உலகச் சாதனை படைத்துள்ளார்.
தனது உடலை வளைத்து, நெளித்து அவர் செய்யும் யோகாசனங்கள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறுமி செய்த யோகாசனங்களின் காணொளியை சமூக ஊடகங்களில் பலரும் பகிர்ந்து, பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
உலகம் முழுவதும் சனிக்கிழமை (ஜூன் 21) அனைத்துலக யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டதை அடுத்து, ஹாசன் மாவட்டத்தைச் சேர்ந்த பலரும் யோகாசனங்களை செய்து அசத்தினர்.
சிறுமி தினந்தோறும் 2 மணி நேரம் யோகா பயிற்சியில் ஈடுபடுவதாகவும் ஏறக்குறைய 600 ஆசனங்களை அவர் அறிந்து வைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.