ரூ. 100க்கு 10 காய்கறி: தீபாவளியையொட்டி வெற்றி சிறப்புக் காய்கறி தொகுப்பு அறிமுகம்

ரூ. 100க்கு 10 காய்கறி: தீபாவளியையொட்டி வெற்றி சிறப்புக் காய்கறி தொகுப்பு அறிமுகம்

கோப்புப்படம்: ஏஎன்ஐ

04 Nov 2026 - 5:00 pm

1 mins read

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, தமிழப் பயனீட்டாளர்களுக்கு அன்றாடச் சமையலுக்குத் தேவையான காய்கறிகளை நியாயமான விலையில் வழங்கும் நோக்கில், 10 வகை காய்கறிகள் அடங்கிய தொகுப்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

வெற்றி சிறப்புக் காய்கறி தொகுப்பு எனப் பெயரிடப்பட்டுள்ள அச்சிறப்புத் திட்டம் நவம்பர் 5ஆம் தேதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பாகக் கூட்டுறவுத்துறை செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) வெளியிட்ட அறிக்கையில், நவம்பர் 5ஆம் தேதி முதல் நவம்பர் 7ஆம் தேதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட 218 கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலைகள், கூட்டுறவுப் பண்டகசாலை விற்பனை நிலையங்கள், சென்னையில் மட்டும் இயக்கப்படும் 4 நடமாடும் காய்கறி கடைகள் ஆகியவை வாயிலாக இச்சிறப்பு விற்பனை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டது.

பெரிய வெங்காயம் (500 கிராம்), தக்காளி (500 கிராம்), உருளைக்கிழங்கு (250 கிராம்), கத்தரிக்காய் (250 கிராம்), கேரட் (200 கிராம்), பீன்ஸ் (200 கிராம்), பச்சை மிளகாய் (100 கிராம்), எலுமிச்சை (100 கிராம்), இஞ்சி (50 கிராம்), தேங்காய் (400–450 கிராம்) உள்ளிட்ட காய்கறிகள் அத்தொகுப்பில் இடம்பெறும்.

ஒரு நபருக்கு ஒரு காய்கறித் தொகுப்பு மட்டுமே வழங்கப்படும் என்றும் அரசால் நிர்ணயிக்கப்பட்ட 100 ரூபாய் என்ற விலையில் மட்டுமே அத்தொகுப்பு விற்கப்பட வேண்டும் என்றும் அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்