மணல், ஜல்லி விலை ரூ.1000 குறைப்பு

1 mins read
9921e31a-96cc-49b6-bea6-8f36b1b559a7
எம் சாண்ட், அல்லது தயாரிக்கப்பட்ட மணல், ஆற்று மணலுக்கு நிலையான மாற்றாக உள்ளது. கடினமான கிரானைட் கற்கள், பாறைகளை உடைத்து இது தயாரிக்கப்படுகிறது - படம்: இணையம்

சென்னை: தமிழ்நாட்டில் எம்-சாண்ட் மணல், ஜல்லி விலையைக் குறைக்க  தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

கடந்த வாரம் ஒரு டன் ரூ. 1000 விலையை உயர்த்தி கிரஷர் உரிமையாளர்கள் அறிவித்து இருந்தனர்.

இந்நிலையில், நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 27) சென்னை, தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கல்குவாரி, கிரஷர்கள், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் நடந்த பேச்சுவார்த்தையில் விலை குறைக்கும் முடிவு எடுக்கப்பட்டது.

எம் சாண்ட், பி சாண்ட், ஜல்லி விலைகள் உயர்த்தப்பட்டதில் இருந்து ரூ.1000 குறைத்து விற்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது. சாதாரண கற்கள் மீதான சீனியரேஜ் தொகையை மெட்ரிக் டன் ஒன்றுக்கு ரூ.33 ஆக நிர்ணயம் செய்யவும் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

குறிப்புச் சொற்கள்