தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ராமேசுவரம் மீனவர்கள் 14 பேர் விடுதலை

1 mins read
b45a5e6c-2e84-4e6a-8e2c-2bd75139c58c
ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் இருந்து டிசம்பர் 5ஆம் தேதி 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் இரண்டு ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குச் சென்றனர். இவர்களில் ராமேசுவரம் தங்கச்சிமடத்தைச் சேர்ந்த 14 மீனவர்களும் அடங்குவர்.

இவர்கள் 14 பேரும் நடுக்கடலில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தபோது, இலங்கைக் கடற்படையினர் அங்கு சுற்றுக்காவல் வந்தனர். எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாகக் கூறி 14 மீனவர்களையும் இலங்கைக் கடற்படையினர் கைது செய்தனர். 2 படகுகளையும் பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து மீனவர்களை இலங்கை மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி சிறையில் அடைத்தனர். கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை விடுவிக்க மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவ அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.

இந்நிலையில், ராமேசுவரம் மீனவர்கள் 14 பேரை அபராதத்துடன் விடுதலை செய்து இலங்கை மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மீனவர்களுக்குத் தலா ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத் தொகையைச் செலுத்தினால் மீனவர்கள் உடனே விடுதலை செய்யப்படுவார்கள் என்றும் இல்லையெனில் ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் நீதிபதி நிபந்தனை விதித்திருந்தார்.

குறிப்புச் சொற்கள்