தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

தமிழக மீனவர்கள் 14 பேர் கைது

1 mins read
2a786339-6569-412e-ba12-cb976f0ea1c0
இலங்கையின் காங்கேசன்துறையில் 14 மீனவர்களிடமும் விசாரணை நடக்கிறது. - கோப்புப் படம்: தமிழக ஊடகம்

ராமேசுவரம்: தமிழகத்தில் இருந்து மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்கள், எல்லை தாண்டி மீன்பிடிப்பதாகக் கூறி அவர்களை இலங்கைக் கடற்படையினர் சிறை பிடிப்பதும் படகுகளை பறிமுதல் செய்வதும் வழக்கமாகி வருகிறது.

இந்த நிலையில், புதுக்கோட்டை ஜெகதாப்பட்டினத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் 14 மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர்.

நெடுந்தீவு அருகே அவர்கள் மீன் பிடித்துக்கொண்டு இருந்த போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் எல்லைதாண்டி மீன்பிடித்ததாகக்கூறி 14 மீனவர்களையும் கைது செய்தனர்.

பின்னர் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் சென்று மீனவர்களிடம் இலங்கைக் கடற்படையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

குறிப்புச் சொற்கள்