தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ரூ.15 கோடியில் அமையும் காலநிலை பூங்கா ஒரு மாதத்தில் திறக்கப்படும்

1 mins read
8ced755f-09d3-4c7d-a5d6-4604a59f2155
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் காலநிலை பூங்கா மற்றும் முடிச்சூரில் ஆம்னி பேருந்து நிறுத்தம் ஆகியவற்றை அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். - படம்: இந்து தமிழ் நாளிதழ்

கிளாம்பாக்கம்: செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.15.2 கோடி செலவில் காலநிலைப் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது.

வாகன நிறுத்துமிடம், குழந்தைகள் விளையாட்டுப் பகுதி, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதி, நவீன உடற்பயிற்சிக் கூடம், கழிப்பறை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் 16.2 ஏக்கர் பரப்பளவில் அமையும் இப்பூங்காவை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 22) நேரில் ஆய்வு செய்தனர்.

இதனையடுத்து முடிச்சூர் வெளிவட்ட சாலையில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.42.7 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் ஆம்னி பேருந்து நிலையத்தையும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். இங்கு 270 படுக்கை வசதிகள், உணவகம், கழிப்பறை வசதி, ஹைமாஸ் விளக்கு, தெருவிளக்கு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சேகர் பாபு, “காலநிலை குறித்து மக்கள் தெரிந்துகொள்ளும் விதத்தில் பல்வேறு செடிகள், செயற்கைக் காடுகள், மழைநீர் தேக்கம், குளம், சிறுவர் பூங்கா போன்றவற்றுடன் அமைக்கப்படும் கால நிலை பூங்காவும் ஆம்னி பேருந்து நிலையமும் இன்னும் ஒரு மாதத்துக்குள் திறக்கப்படும்,” என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்