தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

ஒவ்வொரு தொகுதியிலும் 2 லட்சம் வாக்குகள்; விஜய் முதல்வராவார்: தவெக பொதுச் செயலாளர் ஆனந்த்

1 mins read
4138fe34-9403-40bb-a929-8c5df3ba6c0e
தவெக தலைவர் விஜய், பொதுச் செய​லா​ளர் ஆனந்த். - படம்: தமிழக ஊடகம்

தென்காசி: தமிழக வெற்​றிக் கழகத்​துக்கு ஒவ்வொரு தொகுதியில் இருந்தும் இரண்டு லட்​சம் வாக்​கு​கள் கிடைக்கும் என்பதால், விஜய் தமிழக முதல்​வ​ராவது உறுதி என்று அக்​கட்​சி​யின் பொதுச் செய​லா​ளர் புஸ்ஸி ஆனந்த் கூறி​யுள்ளார்.

தென்​காசி மாவட்​டம் சங்​கரன்​கோ​விலில் நடைபெற்ற நலத்​திட்ட உதவி​கள் வழங்​கும் விழாவில் ஆனந்த் பேசி​னார்.

“படிப்படியாக முன்னேறி வரும் தவெகவின் பக்கம் சாதாரண மக்​களும் ஊழியர்களும் உள்​ளனர். நமது மூச்சு, முகவரி எல்​லாமே விஜய்​தான்.

“கட்சி நிகழ்வுகளில் பதாகைகளை வைக்கவேண்டாம் என விஜய் கூறி​யுள்​ளார். அதன்படி அனை​வரும் செயல்பட வேண்​டும்.

“ஒவ்வோர் வீட்​டிலும் குறைந்​தது இருவர் அல்​லது மூவர் தவெக பக்கம் உள்ளதால் ஒரு தொகு​தி​யில் குறைந்தது 80,000 வீடு​கள் இருந்தது எனில், தவெக​வுக்கு சராசரி​யாக 2 லட்​சம் வாக்குகள் கிட்டும்.

“தமிழக மக்​களுக்கு அமை​தி​யான வாழ்க்​கையை தவெக​வால் மட்​டுமே கொடுக்க முடி​யும். 2026 சட்​டப்​பேர​வைத் தேர்​தலில் தவெக வெற்றிபெற்று, முதல்​வர் பதவி​யில் விஜய் அமர்​வார் என்​ப​தில் எந்த சந்​தேக​மும் இல்​லை. தவெகவின் ஆட்சி அமைந்​ததும் சங்​கரன்​கோ​விலில் ஜவுளிப் பூங்கா தொடங்கப்​படும்,” என்று ஆனந்த் கூறினார்.

குறிப்புச் சொற்கள்