தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு, விசாரணைக்கு மூன்று ஐ.பி.எஸ். அதிகாரிகள்: உயர் நீதிமன்றம்

1 mins read
02a4b792-6663-423b-8ff5-6d3736714f72
சென்னை உயர் நீதிமன்றம். - படம்: ஊடகம்

சென்னை: பாலியல் வன்கொடுமைக்கு ஆளான அண்ணா பல்கலைக்கழக மாணவியின் விவரங்கள் கசிந்ததை அடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடாக வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழக மக்களை உலுக்கியுள்ள இந்த விவகாரம் குறித்த அறிக்கை சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இந்த வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

இந்நிலையில், மாணவி வன்கொடுமை வழக்கு தொடர்பில் மூன்று பெண் ஐ.பி.எஸ். அதிகாரிகள் அடங்கிய புலனாய்வுக் குழுவை நீதிமன்றம் அமைத்துள்ளது.

இந்த வழக்கின் விசாரணையைக் கண்காணிக்க சிறப்புப் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசும் தானாக முன்வந்து ஒரு குழுவை அமைக்க ஒப்புக்கொண்டது.

அதன்படி, அண்ணாநகர் துணை ஆணையர் சினேகபிரியா, ஆவடி துணை ஆணையர் ஐமான் ஜமால், சேலம் துணை ஆணையர் பிருந்தா ஆகியோர் இந்தக் குழுவில் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்புச் சொற்கள்