தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருப்பூரில் பங்ளாதேஷ் குடிமக்கள் 26 பேர் கைது

1 mins read
c602c952-2a69-4ec8-95f3-0b443f659ead
கைதானவர்கள் அனைவரும் போலி ஆதார் அட்டை வைத்திருப்பது தெரியவந்தது. - படம்: ஊடகம்

திருப்பூர்: பல்லடம் பகுதியில், சட்டவிரோதமாக வசித்து வந்த பங்ளாதேஷ் குடிமக்கள் 26 பேர் கைது செய்யப்பட்டனர்.

பங்ளாதேஷில் நிலவும் அமைதியற்ற சூழல் காரணமாக, அந்நாட்டு மக்கள் ஏராளமானோர் இந்தியாவுக்குள் ஊடுருவுகின்றனர். அந்த வகையில், இந்தியா முழுவதும் ஆயிரக்கணக்கான பங்ளாதேஷ் குடிமக்கள் சட்டவிரோதமாக குடியேறியதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, சட்டவிரோதக் குடியேறிகளை நாடுகடத்தும் பணியை இந்திய உள்துறை அமைச்சு முடுக்கிவிட்டுள்ளது.

இந்நிலையில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தில் பங்ளாதேஷ் குடிக்கள் வசித்து வருவதாக கிடைத்த தகவலின் பேரில், காவல்துறையினர் டிகேடிமில் பகுதியில் அதிரடிச் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, 26 சட்டவிரோதக் குடியேறிகள் சிக்கினர். அவர்கள் அனைவரும் போலி ஆதார் அட்டை வைத்திருப்பது தெரியவந்தது.

அந்த அட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சில ஆவணங்களும் கைப்பற்றப்பட்டதாகவும் போலி ஆதார் அட்டைகளை வழங்கும் முகவர்கள் குறித்து விசாரணை நடப்பதாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

மேலும், கைதானவர்களை நாடுகடத்தும் நடவடிக்கைகள் தொடங்கியிருப்பதாக திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் சிறப்புத் தனிப்படையினர் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்