சென்னை: தமிழகத்தில் 31 ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
2024 நவம்பர் மாதம் முதல்வர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பிறகு தமிழக அமைச்சரவையில் மாற்றங்கள் செய்யப்பட்டன.
துணை முதலமைச்சராக உதயநிதி ஸ்டாலின் நியமனம் செய்யப்பட்டார்.
அப்போது முதல், தமிழ்நாடு காவல்துறை மற்றும் ஆட்சிப் பணியில் இருக்கும் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம் தொடர்கதை ஆகி வருகிறது.
நவம்பர் 11ஆம் தேதி ஆறு ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். பின்னர், நவம்பர் 27ஆம் தேதி ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
இந்த நிலையில், கிட்டத்தட்ட மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு தற்போது ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
திண்டுக்கல், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, விழுப்புரம், திருவண்ணாமலை, திருப்பத்தூர், நெல்லை, திருவாரூர் ஆகிய 9 மாவட்ட ஆட்சியர்கள் உட்பட 31 ஐஏஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது.
மாற்றங்களுக்குப் பின்னர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரதாப், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக தர்பகராஜ், நெல்லை மாவட்ட ஆட்சியராக சுகுமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.