33 புதிய வகை ஊர்வனங்கள் கண்டுபிடிப்பு

33 புதிய வகை ஊர்வனங்கள் கண்டுபிடிப்பு

1 mins read
7cdf268e-1899-47e2-97e1-c9c1753892a7
படம்: - பிக்சாபே

நீலகிரி: நீலகிரியில் இருக்கும் வனப்பகுதிகளில் 33 புதிய வகை ஊர்வனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சீகூர், சிங்காரா, தெங்குமரகடா பகுதிகளில் நீர், நிலங்களில் வாழும் 36 புதிய உயிரினங்களும் முதல்முறையாக அடையாளம் காணப்பட்டன.

கேரளாவைச் சேர்ந்த நிபுணர் குழுவொன்று நீலகிரி வனப்பகுதியில் மூன்று நாள்கள் நடத்திய கணக்கெடுப்பின்போது இந்த உயிரினங்களைப் பார்த்ததாகத் தெரிவித்துள்ளனர். கண்டுபிடிக்கப்பட்ட புதிய உயிரினங்களில் 16 வகை உயிரினங்கள் அழிவின் பட்டியலில் உள்ளவை என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்புச் சொற்கள்