தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

மத்திய அரசு நிதி வழங்காததால் 40 லட்சம் மாணவா்கள் பாதிப்பு: அன்பில் மகேஸ்

2 mins read
78f0908b-f7fe-43af-9d3d-7a86afa7e0c3
அமைச்சர் அன்பில் மகேஷ். - படம் ஊடகம்

சென்னை: தமிழக பள்ளிக் கல்விக்கான நிதியை மத்திய அரசு வழங்காததால் 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலம் பாதிக்கப்படுவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் நடைபெற்ற மாநில அளவிலான வானவில் மன்றப் போட்டிகள், அறிவியல் கண்காட்சியைத் தொடங்கிவைத்து அவர் பார்வையிட்டார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளா்களிடம் பேசிய அமைச்சா் அன்பில் மகேஸ், “தமிழகத்துக்கு வரவேண்டிய நிதியை வழங்காமல் மத்திய அரசு காலதாமதம் செய்துவருகிறது. இதன்மூலம் ஏறக்குறைய 40 லட்சம் மாணவா்களின் எதிா்காலத்தில் விளையாடிக் கொண்டுள்ளது.

“அந்தக் கட்சியின் (பாஜக) தமிழகத் தலைவா் தேவையற்ற கருத்துகளைப் பேசுவதை விடுத்து மாநிலத்துக்கான நிதியைப் பெற்றுத் தர முன்வரவேண்டும்.

“மாணவா்களின் எதிா்காலம்தான் எங்களுக்கு முக்கியம். இதில் எவரும் அரசியல் பண்ணக்கூடாது என்பதை வலியுறுத்தி வருகிறோம்.

“ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்திட்ட நிதி வராததால் கல்விசாா் திட்டங்கள் தடைப்பட்டுள்ளன. இதன்மூலம் மாநில அரசுக்கு மத்திய அரசு நிதி நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

“ஏசா் எனும் அமைப்பின் மூலமாக பள்ளிக்குச் செல்லாமல் வீடுகளுக்குச் சென்று கல்வி அறிக்கை தயாரித்து வெளியிடப்படுகிறது.

“இத்தகைய சா்ச்சைகளுக்கு எல்லாம் முடிவு கட்டும் வகையில் பள்ளிக் கல்வித்துறை சாா்பில் விரைவில் ஒரு அறிக்கை வெளிவரும்.

“அதில் எங்கள் மாணவா்கள் எந்த நிலையில் இருக்கிறாா்கள் என்பது தெரியும். கல்வியில் சிறந்த தமிழகம் என்பதும் அந்தத் தரவுகள் மூலம் தெரியவரும்,” எனத் தெரிவித்தார்.

குறிப்புச் சொற்கள்