பாராலிம்பிக் வெற்றியாளர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை

பாராலிம்பிக் வெற்றியாளர்களுக்கு ரூ.5 கோடி ஊக்கத்தொகை

1 mins read
98d96ebe-958c-4f20-8280-b3cefb620c52
ஊக்கத்தொகை பெற்ற வீரர், வீராங்கனைகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின். - படம்: ஊடகம்

சென்னை: பாராலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்கு வெள்ளி, வெண்கலப் பதக்கங்களை வென்று தந்த வீரர், வீராங்கனைகளுக்கு தமிழக அரசு ஐந்து கோடி ரூபாய் ஊக்கத்தொகை அளித்துள்ளது.

பாரிஸ் பாராலிம்பிக் போட்டியில் தமிழக வீராங்கனைகள் துளசிமதி, நித்யஸ்ரீ, மனிஷா, விளையாட்டு வீரர் மாரியப்பன் ஆகியோர் பதக்கங்கள் வென்றுள்ளனர்.

சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை (நேற்று), முதல்வர் மு.க.ஸ்டாலின் இதற்கான காசோலைகளை வழங்கி வீரர்களை வாழ்த்தினார்.

இளையர் நலன், விளையாட்டுத் துறை சார்பில் இந்த ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது.

இதேபோல் சதுரங்க ஒலிம்பியாட் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்கள் மூன்று பேருக்கு ரூ.90 லட்சம் ஊக்கத்தொகை அளித்துள்ளது தமிழக அரசு.

குறிப்புச் சொற்கள்