தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

திருச்சியில் ரூ.50 கோடியில் ஒலிம்பிக் அகாடமியின் முதல் பகுதி தொடக்கம்

1 mins read
19d83e22-4a5a-47b4-819b-96ad8739fb87
ரூ.50 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமியின் பகுதி ஒன்றிற்கு தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வியாழக்கிழமை (ஜனவரி 23) அடிக்கல் நாட்டினர். - படம்: தமிழக ஊடகம்

திருச்சி: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருவெறும்பூர் தொகுதியில் ரூ.50 கோடி மதிப்பீட்டில் ஒலிம்பிக் அகாடமி பகுதிக்கு ஒன்றை அமைக்க, தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் வியாழக்கிழமை (ஜனவரி 23) அடிக்கல் நாட்டினர்.

எலந்தப்பட்டி கிராமத்தில் கிட்டத்தட்ட 48.87 ஏக்கர் பரப்பளவில் உள் அரங்கம், வெளி அரங்கம் , பயிற்சி மைதானம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய ஒலிம்பிக் அகாடமி அமைய உள்ளது.

“ஒலிம்பிக் அகாடமி மையத்திற்கான அடிக்கல்லை ஏற்கெனவே உதயநிதி ஸ்டாலின் நாட்டியுள்ளார். இந்த நிலையில் ஒலிம்பிக் அகாடமி ஒன்று, இரண்டு என இரண்டு பகுதியாக நடைபெறுகிறது. இந்தப் பணி 18 மாதத்தில் நிறைவடையும். இங்கு எல்லாவிதமான விளையாட்டுக்கும் பயிற்சி அளிக்கப்படும்,” என்று நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு தெரிவித்தார்.

திருச்சி மாவட்டத்தில் தொடர்ந்து பல்வேறு பணிகள் தொடங்கி உள்ளதால் திருச்சி மாவட்ட மக்கள் அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இதேபோல் மேலும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் நடைபெற இருப்பதால் திருச்சி மாவட்டம் வளர்ச்சி அடைந்த மாவட்டமாக மாறும் என்பதில் சந்தேகமில்லை என்றார் அவர்.

பகுதி 2-ல் அடுத்த கட்டுமானம் இடம்பெறும். அந்த திட்டத்தின் மதிப்பிடப்பட்ட செலவு 100 கோடி ரூபாயாகும்.

குறிப்புச் சொற்கள்