சுகாதாரத் துறைக்கு மூன்று ஆண்டுகளில் 545 விருதுகள்

1 mins read
d319d8c5-584c-4d28-a35f-b3ac69a5628b
தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன். - படம்: ஊடகம்

சென்னை: தமிழக சுகாதாரத் துறைக்கு கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் 545 விருதுகள் கிடைத்திருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியிட்ட செய்திக்குறிப்பில், தமிழக அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக லட்சக்கணக்கானோரின் உயிர்கள் காப்பாற்றப்பட்டுள்ளதாகவும் அரசு குறிப்பிட்டுள்ளது.

மேலும், அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு சுகாதாரத் திட்டங்கள் குறித்த புள்ளி விவரங்களை தமிழக அரசு செய்திக் குறிப்பில் பட்டியலிட்டுட்டுள்ளது.

தமிழக சுகாதாரத்துறையின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்ட ஆஸ்திரேலிய அமைச்சர் அவற்றைப் பாராட்டி உள்ளார்.

மேலும் குஜராத், மேகாலயா மாநிலங்களைச் சேர்ந்த மருத்துவக் குழுக்களும் இதேபோன்று பாராட்டு தெரிவித்துள்ளன.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சரான மா.சுப்பிரமணியன் பொறுப்பேற்றது முதல் தமிழகம் பல்வேறு விருதுகளையும் பாராட்டுகளையும் பெற்று வருகிறது என்று அரசு பெருமிதம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ‘வருமுன் காப்போம்’ திட்டத்தின் மூலம் சுமார் 36 லட்சம் பேரும் சிறுநீரகப் பாதுகாப்புத் திட்டத்தின் மூலம் 56 லட்சம் பேரும் பயனடைந்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ள தமிழக அரசு, தொழிலாளர்களைத் தேடி மருத்துவம், இன்னுயிர் காப்போம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் தொடர்ந்து செயல்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்