சென்னை மாநகராட்சியில் லஞ்சம் வாங்கிய எழுவர் பணியிடைநீக்கம்

சென்னை மாநகராட்சியில் லஞ்சம் வாங்கிய எழுவர் பணியிடைநீக்கம்

1 mins read
ca7628da-2e74-4bf9-a8c8-3eee07a79d45
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் மூவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. - படம்: இந்து தமிழ்திசை

சென்னை: ​சென்னை மாநகராட்சியில் லஞ்சம் வாங்கிய ஏழு அலுவலர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர்மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கரூர் மக்​கள் சந்​திப்பு நிகழ்ச்​சி​யில் பேசிய முதல்​வர் விஜய், “அரசு அலு​வல​கங்​களில் லஞ்சம் கேட்​டால் கொடுக்​காதீர்​கள். என் பெயரை சொல்​லுங்​கள்,” என கூறினார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புக் காவல்துறை தமிழகம் முழு​வதும் அரசு அலுவலகங்களில் சோதனையைத் தீவிரப்​படுத்​தியிருக்கிறது.

சொத்து பத்​திரப் ​பதிவு, சாலைப் போக்​கு​வரத்து அலு​வல​கங்​கள், மாநக​ராட்சி அலுவலகங்களில் சோதனை நடத்​தின. அப்​போது மின்னிலக்கப் பரிவர்த்​தனை மூலம் லஞ்சம் கைமாறியதைக் கண்​டறிந்​ததோடு ரொக்கப் பணத்​தை​யும் அதிகாரிகள் பறி​முதல் செய்​தனர்.

சென்னை மாநக​ராட்​சி​யில் ராயபுரம், திரு.​வி.க.நகர், அண்ணா நகர், தேனாம்​பேட்​டை, கோடம்​பாக்​கம், பெருங்​குடி ஆகிய ஆறு மண்டல அலு​வல​கங்​களில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற சோதனை​யில் கணக்​கில்​வ​ராத பணம் கைப்​பற்​றப்​பட்​டது. யுபிஐ பரிவர்த்தனை மூலம் லஞ்​சம் கைமாறியதும் கண்டுபிடிக்கப்பட்டது.

மாநக​ராட்சி மண்​டலங்​களில் நடை​பெற்ற சோதனை அடிப்படையில் ஏழு பேரை மாநக​ராட்சி ஆணை​யர் ஜி.எஸ்​.சமீரன் இடைநீக்கம் செய்து உத்​தர​விட்​டுள்​ளார்.

திரு.​வி.க.நகர் மண்​டலத்​தில் செயற்பொறி​யாளர் ஆர்​.சர​வணன், உதவி செயற்​பொறி​யாளர் டி.ர​விவரமன், உதவிப் பொறி​யாளர் டி.சரஸ்​வ​தி, வருவாய் பிரிவு இளநிலை உதவி​யாளர், மணி​கண்​டன் ஆகிய நால்வரும் இடைநீக்கம் செய்​யப்​பட்டனர்.

தேனாம்​பேட்டை மண்​டலத்​தில் கண்​காணிப்​பாளர் ஏ.ஸ்ரீரா​முலு, சுகா​தார ஆய்​வாளர் ஏ.மஞ்சித் ஹுசைன், தூய்​மைப் ​பணி மேற்பார்​வை​யாளர் ஆர்​.கோ​தண்​டன் ஆகிய மூவரும் இடைநீக்கம் வழக்கும் பதிவு செய்​யப்​பட்டது.

குறிப்புச் சொற்கள்