தமிழகம் முழுவதும் 83 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்

தமிழகம் முழுவதும் 83 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம்

2 mins read
937ccb10-8f10-400b-9ad5-0b70c12d7a47
சென்னை உயர் நீதிமன்றம். - கோப்புப் படம்: ஸ்வராஜ்யா

சென்னை: தமிழகம் முழுவதும் 83 மாவட்ட நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மாற்றம் செய்யப்பட்டவர்களில் தவெக தலைவர் விஜய், அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து வழக்கை விசாரித்து வந்த நீதிபதியும் அடங்குவார்.

சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதியின் உத்தரவுப்படி நீதிபதிகளை இடமாற்றம் செய்யுமாறு உயர் நீதிமன்றத் தலைமைப் பதிவாளர் எஸ். அல்லி உத்தரவிட்டுள்ளார்.

அவரது உத்தரவின்படி மதுரை மாவட்ட கூடுதல் நீதிபதி என். லோகேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளராக (ஆய்வு) இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கெனவே அங்குப் பணியாற்றிய நீதிபதி கே. சுதா திருவள்ளூர் மாவட்ட மோட்டார் வாகன விபத்து வழக்குகளுக்கான சிறப்பு நீதிபதியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இதேபோல், நாகப்பட்டினம், விருதுநகர், மதுரை, ராமநாதபுரம், மயிலாடுதுறை, பெரம்பலூர், சென்னை, காஞ்சிபுரம் எனப் பல மாவட்டங்களைச் சேர்ந்த நீதிபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

விஜய், சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி இ. சசிகலா மாற்றப்பட்டு அவருக்குப் பதிலாக டி. சுஜாதா நியமிக்கப்பட்டுள்ளார்.

இதேபோல சென்னையில் இணை ஆணையர் உட்பட ஒரே நாளில் காவல்துறையினர் 40 பேர் பணி ஓய்வு பெற்றுள்ளனர்.

இணை ஆணை​யர் எஸ்​. மகேஸ்​வரன் சென்னை காவல் துறை​யில், தலை​மை​ இணை ஆணை​ய​ராகப் பணி​யாற்றி வந்​தார்.

இவர் மட்டுமல்லாமல் உதவி ஆணை​யர் ராஜா, காவல் ஆய்​வாளர் ஹரி​தாஸ், காவல் உதவி ஆய்​வாளர்​கள் 16 பேர், சிறப்பு உதவி ஆய்​வாளர்​கள் 20 பேர், ஒரு பெண் தலைமைக் காவலர் என மொத்​தம் 40 பேர் வியாழக்கிழமை (ஏப்ரல் 30) ​பணி ஓய்வு பெற்​றனர்.

குறிப்புச் சொற்கள்