தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இல்லாத பாடலைக் குறள் என்பதா?: ஆளுநருக்கு ப. சிதம்பரம் கண்டனம்

2 mins read
a22f9440-a585-4aea-8021-718badcec9fd
முன்னாள் இந்திய அமைச்சர் ப. சிதம்பரம். - படம்: ஊடகம்

சென்னை: காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை ‘திருக்குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல் என்று முன்னாள் இந்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் சாடியுள்ளார்.

இது தொடர்பாக தமது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அதில், “ஜூலை 13ஆம் தேதியன்று ‘வள்ளுவர் மறை வைரமுத்து உரை’ என்ற நூலைத் தமிழ்நாடு முதல்வர் வெளியிட, அதன் முதல் படியைப் பெறும் பெருமை எனக்குக் கிடைத்தது.

“அதே நாளில் இன்னொரு நிகழ்ச்சி ஆளுநர் மாளிகையில் நடந்தது என்று படித்தேன். அந்நிகழ்ச்சியில் திருவள்ளுவரை அவமதிக்கின்ற ஒரு நிகழ்வு நடந்தது என்று அறிந்து அதிர்ச்சியடைந்தேன்.

“சிறந்த மருத்துவர்களுக்கு ஆளுநர் கொடுத்த விருதில் ஒரு போலி ‘குறள்’ பொறிக்கப்பட்டிருந்தது என்பதுதான் அந்த அதிர்ச்சிச் செய்தி. ‘குறள் 944’ என்று பொறிக்கப்பட்ட ‘குறள்’ திருக்குறள் நூலில் இல்லை. எழுத்துப் பிழையோ எண் பிழையோ என்று திருக்குறளின் எல்லாக் குறள்களையும் படித்துப் பார்த்தால் அது போன்ற பாடலே நூலில் இல்லை என்று தெரிய வருகிறது.

“குறள் 123லிருந்து திருடி, திருத்தி, இல்லாத பாடலைத் திருக்குறள் பாடலாகப் பரப்புவது தரம் தாழ்ந்த செயல். காவி உடை போர்த்தப்பட்ட திருவள்ளுவர் சித்திரம் போல், இல்லாத பாடலை ‘குறள்’ என்று பரப்புவது திருவள்ளுவரை அவமதிக்கும் ஒரு மன்னிக்க முடியாத செயல். போலிச் சித்திரம், போலிக் குறள்…. இந்தப் போக்கு எங்குக் கொண்டுசெல்லும்?” என்று திரு சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்