தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பன்னீர்செல்வத்துக்கு அதிமுக நிபந்தனை

1 mins read
95e63f15-1678-4285-875b-115d21ed6ed9
ஓ.பன்னீர்செல்வம். - படம்: ஊடகம்

மதுரை: முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்த்துக்கொள்ள அவர் ஆறு மாதங்களாவது நீதிமன்றத்திற்கு செல்லாமல் அமைதியாக இருக்க வேண்டும் என அதிமுக எம்எல்ஏ ராஜன்செல்லப்பா தெரிவித்துள்ளார்.

ஓபிஎஸ் அமைதி காத்தால் அவரை கட்சியில் இணைப்பது குறித்து அதிமுக தலைமையின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும் என்றார் அவர்.

இதையடுத்து, ஓபிஎஸ் தரப்பை அரவணைக்க அதிமுக தயாராகிவிட்டதாக அக்கட்சி வட்டாரங்களில் பேசப்படுகிறது.

“வழக்குகள் மூலம் கட்சி வளர்ச்சியை யாரும் தடுக்கக் கூடாது,” என்றும் ராஜன் செல்லப்பா கூறினார்.

குறிப்புச் சொற்கள்