14 அமைச்சர்களின் தொகுதிகளைக் கூட்டணிகளுக்கு வழங்கிய அதிமுக

14 அமைச்சர்களின் தொகுதிகளைக் கூட்டணிகளுக்கு வழங்கிய அதிமுக

2 mins read
d79a5960-534c-41b6-922f-bd272f7a3604
தவெக தலைவர் விஜய் போட்டியிட இருக்கும் பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. - படம்: ஒன் இந்தியா

சென்னை: திமுக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள 14 பேரின் தொகுதிகளை கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக ஒதுக்கி உள்ளது.

தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதிமுக கூட்டணியில் இருக்கும் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி புதன்கிழமை (மார்ச் 25) வெளியிட்டார்.

ஏற்கெனவே அறிவித்த படி, பாஜக - 27, பாமக - 18, அமமுக - 11, தமாகா - 5, ஐஜேகே -2 எனத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டு உள்ளன.

ஆனால் தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் முக்கிய தொகுதிகளை, தன்னுடைய கூட்டணிக் கட்சிகளுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி உள்ளார்.

அதாவது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போட்டியிட விரும்பும் தொகுதியான பெரம்பூர் தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவிற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

அதேபோல, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் காரைக்குடி தொகுதி அதிமுக கூட்டணியில் உள்ள அமமுகவுக்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

மேலும் சபாநாயகர் அப்பாவுவின் தொகுதியான ராதாபுரம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட அதிமுக கூட்டணியில் இருக்கும் பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

அதிமுகவின் கோட்டை என்று கருதப்படும் சபாநாயகராக இருந்த தனபாலுவின் தொகுதியான அவிநாசி (தனி) தொகுதி மாற்றி பாஜகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இவை தவிர, 14 திமுக அமைச்சர்களின் சொந்தத் தொகுதிகளையும் அதிமுக நேரடியாகப் போட்டியிடாமல் கூட்டணிக் கட்சிகளுக்கே எடப்பாடி பழனிசாமி ஒதுக்கி இருக்கிறார்.

குறிப்புச் சொற்கள்