அதிமுக - பாஜக கூட்டணியால் புதுச்சேரி அதிமுகவினர் அதிருப்தி

2 mins read
f545cc40-fa7d-4929-a89f-dbeeedd60432
அதிமுக - கூட்டணி அறிவிப்பு வெளியிட்டதும் அதிமுகவில் இருந்து வெளியேறுவதாக அறிவித்த புதுச்சேரி அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் அசான் மரைக்காயர். - கோப்புப்படம்: ஊடகம்

சென்னை: தமிழ்நாட்டில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக - பாஜக இணைந்து போட்டியிடும் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனால் புதுச்சேரி அதிமுகவுக்கு எவ்விதப் பயனும் விளையப் போவதில்லை என்று புதுச்சேரி அதிமுகவினர் கருதுவதாகத் தமிழக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சென்ற 2024 மக்​கள​வைத் தேர்​தலில் புதுச்​சேரி​யில் அதி​முக தனித்துப் போட்​டி​யிட்​ட​போது, சட்​டப்​பேர​வைத் தேர்​தல் தோல்விக்கு பாஜக-வுடன் கூட்​டணி அமைத்​ததே காரணம் எனப் பிரசாரம் செய்​தார்​கள். அதனால், “2026 பேர​வைத் தேர்​தலில் தனித்​துப் போட்​டி​யிட்டு எங்​களது பலத்​தைக் காட்​டு​வோம்,” எனப் புதுச்சேரி அதி​முக​வினர் மார்​தட்டி நின்ற நிலை​யில், எதிர்​பா​ராத திருப்​ப​மாக அதி​முக - பாஜக கூட்​டணி அமைந்​து​விட்​டது. இதைத் தங்களுக்கு ஏற்​பட்ட பின்​னடை​வாகவே புதுச்​சேரி அதி​முகவினர் கருதுகின்​ற​னர்.

அதிமுகவிலிருந்து விலகிய முன்னாள் எம்எல்ஏ அசனா

பாஜக கூட்​ட​ணியை ஏற்​காமல் அதி​முகவை விட்டு வில​கிய முன்​னாள் எம்​எல்​ஏ-​வான அசனா, “பாஜக கூட்​ட​ணி​யால்​தான் 2021 சட்​டமன்​றத் தேர்​தலில் வெற்​றி​வாய்ப்பை இழந்​தோம். தோல்விக்கு பாஜக கூட்​ட​ணி​தான் காரணம் என்​ப​தால் தான் பாஜக-வுடன் கூட்​டணி இல்லை என முடி​வெடுக்​கப்​பட்​டது. அதை மறந்​து​விட்டு மீண்​டும் பாஜக-வுடன் கூட்​டணி சேர்ந்​ததை என்​னால் ஏற்​றுக்​கொள்ள முடிய​வில்​லை,” என்​றார்.

2026ல் போட்​டி​யிட திட்​ட​மிட்டு தொகு​திக்​குள் வேலை செய்து வந்த அதி​முக-​வினர் பலரும் தற்​போது, தங்​களுக்கு போட்​டி​யிடத் தொகுதி கிடைக்​கு​மா, சிறு​பான்​மை​யினர் வாக்கு கிடைக்​குமா என்​றெல்​லாம் கவலைப்பட ஆரம்​பித்​து​விட்​டார்​கள்.

ஏற்​கெனவே கோஷ்டிப் பூசல்களால் கலகலத்​துக் கிடக்​கிறது புதுச்​சேரி அதி​முக. இந்த நிலை​யில் மீண்​டும் பாஜக கூட்​ட​ணிக்​குள் வந்​திருப்​ப​தால் இம்​முறை​யும் பேர​வைக்​குள் செல்​லும் வாய்ப்பை இழந்​து​விடு​வோமோ என அதிமுக தொண்டர்கள் அச்​சப்​படுவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

பாஜகவுடன் சேர்ந்தது வருத்தமே - அதிமுக முன்னாள் எம்எல்ஏ குணசேகரன்

இந்நிலையில், அதிமுக - பாஜக கூட்டணி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக ஆலோசனைக் கூட்டம் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் திருப்பூரில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. குணசேகரன் பேசுகையில், பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைத்தது வருத்தமாக இருந்தாலும் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டிய கடமை நமக்கு உள்ளது. இஸ்லாமியர்கள் வருத்தம் அடைய வேண்டாம், அதிமுக என்றும் உங்களுடன் துணை நிற்கும் என்றார்.

நிர்பந்தம் காரணமாகக் கூட்டணி

இதே நிகழ்வில் முன்னாள் கவுன்சிலர் கண்ணப்பன் பேசுகையில், நாதழுதழுக்க குரல் உடைந்து, கட்சியை உடைக்கப் பார்க்கின்றனர், நிர்பந்தம் காரணமாகக் கூட்டணி வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்