விழுப்புரம்: திண்டிவனத்தில் ஜேசிபியில் சென்று அதிமுக எம்எல்ஏ அர்ஜுனன் மக்களுக்கு ஆறுதல் கூறினார்.
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஃபெஞ்சல் புயல் சனிக்கிழமை இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது.
திண்டிவனத்தில் 38 சென்டிமீட்டர் அளவுக்கு மழை செய்ததால் கிடங்கல் ஏரி முழுவதுமாக நிரம்பி, அதில் இருந்து வெளியேறிய தண்ணீர் வெள்ளம் போல் சாலைகளில் ஓடுகிறது. இதனால் கிடங்கல் ஏரியை ஒட்டியுள்ள வகாப் நகர், இந்திரா நகர், வசந்தபுரம் பகுதியில் உள்ள 500க்கும் மேற்பட்ட வீடுகள் வெள்ளத்தில் சூழப்பட்டுள்ளன. இதனால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் மக்கள் நீண்ட நேரம் தவித்து வருகின்றனர்.
இதனை அறிந்த திண்டிவனம் எம்எல்ஏ அர்ஜுனன் வகாப் நகர் பகுதியில் வீட்டுக்குள் முடங்கி கிடக்கும் மக்களை ஜேசிபி வாகனத்தில் சென்று ஆறுதல் கூறி, நலத்திட்ட உதவிகளை வழங்குவதாக உறுதியளித்தார்.

