சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் இரண்டாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெள்ளிக்கிழமை (மார்ச் 27) வெளியிட்டார்.
அதில், 127 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் இடம்பெற்றனர்.
அதிமுகவின் சார்பில் ஏற்கெனவே 23 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ள நிலையில், தற்போது 127 தொகுதிகள் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாஜக 27 தொகுதி, பாமக 18 தொகுதி, அமமுக 11 தொகுதி, தமாகா 5 தொகுதி எனப் போட்டியிடுகின்றன.
அதிமுக 167 இடங்களில் போட்டியிடுகிறது. மூன்றாம் கட்ட வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சி விரைவில் வெளியிடக்கூடும்.
தமிழ்நாட்டில் ஏப்ரல் 23ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.

