சென்னை: ஆபாசமாகப் பேசும் அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “வனத்துறை அமைச்சர் பொன்முடி, அண்மையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சைவ, வைணவ சமயங்களின் குறியீடுகளைத் தொடர்புப்படுத்தி பெண்களை எவ்வளவு கொச்சையாக பேசமுடியுமோ அந்த அளவுக்கு கொச்சைப்படுத்திப் பேசி இருக்கிறார்.
“பெண்களின் மனங்களையும் மக்களின் மனங்களையும் புண்படுத்தி, கீழ்த்தரமான முறையில் ஆபாசமாகப் பேசியிருக்கும் திமுக அரசின் அமைச்சர் பொன்முடியைக் கண்டித்து அதிமுக மகளிர் அணி சார்பில் வரும் 16ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை சைதாப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்,” என்று பழனிசாமி தெரிவித்துள்ளார்.