சென்னையில் காற்றின் தரம் மோசம்

சென்னையில் காற்றின் தரம் மோசம்

1 mins read
45618297-568a-45e9-b3d8-b82358708596
சென்னையின் எந்தப் பகுதியிலும் காற்றின் தரம் தரமாக இல்லை என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது. - படம்: ஊடகம்

சென்னை: சென்னையில் தீபாவளியன்று வெடிக்கப்பட்ட பட்டாசுகள் காரணமாக காற்றுமாசு ஏற்பட்டது. சென்னையில் உள்ள நான்கு முக்கியப் பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசமடைந்ததாகவும் சென்னையில் எந்த இடத்திலும் தரமான காற்று என்பது தற்போது இல்லை என்றும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.

சென்னையில் இரண்டு மணி நேரம் மட்டும் பட்டாசு வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் ஒரே சமயத்தில் பட்டாசுகளை வெடித்தனர்.

இதனால் ஏற்பட்ட புகைமூட்டம் காரணமாக பலருக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டது. மேலும் கண்ணெரிச்சல் காரணமாக பலர் பாதிக்கப்பட்டனர்.

சென்னையில் பெருங்குடி, ஆலந்தூர், அரும்பாக்கம், வேளச்சேரி ஆகிய நான்கு இடங்களில் காற்றின் தரம் தீபாவளியன்று மிக மோசமாக இருந்தது என்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

குறிப்புச் சொற்கள்