விஜய் கட்சியில் தோற்றுப்போன அஜித்

விஜய் கட்சியில் தோற்றுப்போன அஜித்

1 mins read
21558abb-bab0-4317-b90e-cbaadedb0300
அஜித். - கோப்புப் படம்: எக்ஸ் பக்கம் / ஐஏஎன்எஸ்

சென்னை: விஜய் தலைமையிலான தவெக கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களில் ஒருவரான அஜித் என்பவர் தோல்வி கண்டார்.

சாத்தூர் தொகுதியில் அவரை வேட்பாளராகக் களமிறக்கியது தவெக தலைமை. அவரை எதிர்த்து திமுக சார்பாக கடற்கரை ராஜ் போட்டியிட்டார்.

வாக்கு எண்ணிக்கையின்போது மூன்றாம் சுற்றின் முடிவில், திமுக வேட்பாளரைவிட 8,000 வாக்குகள் பின்தங்கியிருந்தார் அஜித். எனினும், இறுதிச்சுற்றின் முடிவு வரை அவரால் முன்னிலை பெற முடியவில்லை.

வாக்கு எண்ணிக்கை முடிவில் அவர் 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனதாக அறிவிக்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்