அஜித் ஆதரவு: ஆர்வம் காட்டும் அதிமுக

அஜித் ஆதரவு: ஆர்வம் காட்டும் அதிமுக

1 mins read
85d9c52a-4849-4c18-8014-38c09163a8d2
அதிமுக பிரசாரத்தின்போது அஜித்தும் பழனிசாமியும் ஒன்றாக இருக்கும் படத்தை அதிமுக நிர்வாகிகள் பரிசளித்தனர்.  - படம்: விகடன்

சென்னை: சட்டமன்றத் தேர்தலில் நடிகர் அஜித்தின் ஆதரவைப் பெறுவதில் அதிமுக தலைமை முனைப்பாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து, அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொள்ளும் இடங்களில் அவரும் அஜித்தும் இணைந்திருக்கும் புகைப்படத்தை அதிமுக நிர்வாகிகள் பரிசாக வழங்கி வருகின்றனர்.

கடந்த மார்ச் 28ஆம் தேதி சென்னையில் எடப்பாடி பழனிசாமி தனது பிரசாரத்தை சோழிங்கநல்லூர் தொகுதியில் இருந்து தொடங்கினார். அப்போது அப்பகுதி அதிமுக நிர்வாகிகள், அஜித்தும் பழனிசாமியும் ஒன்றாக இருக்கும் படத்தைப் பரிசளித்தனர். அவரும் மலர்ந்த முகத்துடன் அதைப் பெற்றுக்கொண்டார். இதையடுத்து, நாகர்கோவிலிலும் அதேபோன்ற படம் பரிசளிக்கப்பட்டது.

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிவகாசி தொகுதியில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டபோது அஜித், ராஜேந்திர பாலாஜியுடன் அவரும் இடம்பெற்றுள்ள புகைப்படம் பரிசாக வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் திரையுலகில் விஜய்யின் தொழில் போட்டியாளராக விளங்கிய அஜித்தின் ஆதரவைப் பெறுவதில் அதிமுக தலைமை ஆர்வம் காட்டுவது வெளிப்படையாகத் தெரிகிறது என அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்புச் சொற்கள்