மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு

மேகதாது அணைக்கு எதிரான தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு

2 mins read
ab311f3f-2016-4653-a099-54520062f1ec
காவிரி ஆற்றுக்குக் குறுக்கே அணை கட்டுவதை எதிர்த்து தமிழ் நாடு சட்டப்பேரவையில் தனித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு மேகதாது அணையைக் கட்டுவதற்கு மத்திய அரசு எவ்வித அனுமதியும் அளிக்கக்கூடாது என்று வலியுறுத்தும் தனித்தீர்மானம் தமிழ் நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அந்தத் தீர்மானத்திற்கு அனைத்துக் கட்சியினரும் ஆதரவு தரவேண்டும் என்று முதல்வர் விஜய் கேட்டுக் கொண்டார். அதன்படி, அனைத்துக் கட்சியினரும் அந்தத் தனித் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

மேகதாது அணை தொடர்பாக சட்​டப்​பேர​வை​யில் முதல்​வர் விஜய், வெள்ளிக்கிழமை தனித் தீர்​மானம் கொண்டு வந்​தார். அதில், “காவிரி நடு​வர் மன்​றம் கடந்த 2007 பிப்ரவரி 5ஆம் தேதி அளித்த இறுதித் தீர்ப்​பு, உச்ச நீதி​மன்​றம் கடந்த 2018 பிப்​ரவரி16ஆம் தேதி அளித்த தீர்ப்பு ஆகிய​வற்றை மதிக்​காமல், தொடர்புடைய படுகை மாநிலங்​களின் ஒப்​புதலை​யும், மத்​திய அரசின் எந்​த​வித அனு​ம​தி​யை​யும் பெறாமல் தன்​னிச்​சை​யாக மேகதாதுவில் அணை கட்ட கர்​நாடக அரசு முயற்​சி செய்வதை ஏற்கமுடி​யாது. கர்​நாடக அரசின் இந்தச் செயலுக்கு கடும் எதிர்ப்பை தெரி​விக்கிறோம்,” என்று கூறப்பட்டுள்ளது.

தீர்​மானத்தை முன்​மொழிந்து உரையாற்றிய முதல்​வர் விஜய், அரசி​யல் கட்​சிகளுக்​குள் கொள்​கை, நிலைப்​பாடு​களில் கருத்துவேறு​பாடு​கள் இருக்​கலாம். ஆனால், மக்​களுக்​கான பிரச்​சினை என்​றால், எல்லாக் கட்​சிகளுமே மக்​கள் பக்​கம்​தான் நிற்​கும். நமது விவ​சா​யிகள், மக்​களுக்​காக நிற்கவேண்​டியது நமது கடமை. நதிநீர் உரிமை​யைப் பாது​காக்கவேண்​டிய பொறுப்​பும் நம் அனை​வருக்​கும் உள்​ளது.

அந்த உணர்வு அடிப்​படை​யில், கட்சி வேறு​பாடு​களை ஒதுக்கி வைத்​து​விட்​டு, ஒருவருக்கொருவர் குறை சொல்​லாமல் ஒட்​டுமொத்த தமிழகத்​துக்​காக நாம் அனை​வரும் ஓரணி​யில் நிற்​பவர்​கள் என்​பதை நிரூபிக்கவேண்​டும். நமது விவ​சா​யிகள், தமிழக மக்​களுக்​காகக் கொண்டு வரப்​படும் இந்தத் தீர்​மானத்தை ஒரு​மித்த கருத்​துடன் அனை​வரும் நிறைவேற்​றித் தரவேண்​டும் என்று முதல்வர் விஜய் பேசினார்.

இதைத்தொடர்ந்​து, தீர்​மானத்​தின் மீதான விவாதத்​தில் பேசிய திமுக, அதி​முக, காங்​கிரஸ், விசிக, பாமக, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட், தேமு​திக, கொமதேக, மதி​முக, மமக, மஜக உள்​ளிட்ட பல்​வேறு கட்​சிகளின் உறுப்பினர்களும் தங்​கள் ஆதர​வைத் தெரி​வித்​தனர்.

குறிப்புச் சொற்கள்