தமிழகம் வருகிறார் அமித் ஷா

1 mins read
42680087-a94e-45a1-9a66-3440c7aeb215
இந்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா. - கோப்புப் படம்: இந்திய ஊடகம்

புதுடெல்லி: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை (ஏப்ரல் 10) இரவு தமிழகம் வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழகம், மேற்கு வங்கத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தோ்தலும் பீகார் மாநிலத்தில் இவ்வாண்டு இறுதியில் தேர்தலும் நடைபெறவுள்ள நிலையில் இம்மூன்று மாநிலங்களுக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக நிர்வாகிகளை சந்திப்பார் என முன்னதாக தகவல் வெளியானது.

தமிழகத்தில் எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து பேரவைத் தோ்தலைச் சந்திக்கும் என எதிர்பாா்க்கப்படுகிறது.

கடந்த மாதம் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்த பிறகு இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில் அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சு மற்றும் தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பது தொடர்பாக அமித் ஷா தமிழகம் வருவதாகக் கூறப்படுகிறது.

மேலும் ஏப்ரல் 11ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்பார் எனத் தெரிகிறது.

குறிப்புச் சொற்கள்