அத்திவரதர்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு தரிசனம் அருளினார்

அத்திவரதர்: 12 ஆண்டுகளுக்குப் பிறகு தரிசனம் அருளினார்

12 ஆண்டுகளுக்குப் பிறகு பக்தர்கள் பரவசம்
படம்: மாலை மலர்

01 Mar 2026 - 5:55 pm

1 mins read

தஞ்சை: கும்பகோணம் பிரம்மன் கோவில் தெரு பகுதியில் வரதராஜப் பெருமாள் கோவிலின் பாதாள அறையில் இருந்து அத்திவரதர் சிலை சனிக்கிழமை (பிப்ரவரி 28) வெளியே கொண்டுவரப்பட்டது.

இதையடுத்து, வீதி உலா வர எடுத்துச் செல்லப்பட்ட அச்சிலை மீண்டும் கோவிலை அடைந்த பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. இந்நிகழ்வில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அத்திவரதரை வழிபட்டனர்.

கடந்த 1739ஆம் ஆண்டு கட்டப்பட்ட கும்பகோணம் வரதராஜப் பெருமாள் கோவிலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் சிலை பக்தர்களின் வழிபாட்டுக்காகக் காட்சிக்கு வைக்கப்படும்.

கடந்த 1915ஆம் ஆண்டு கோவில் பாதாள அறையில் இருந்து கொண்டு வரப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்த அச்சிலை, அதன் பின்னர் 98 ஆண்டுகளாக பாதாள அறையிலேயே இருந்தது.

கடைசியாக, கடந்த 2013ஆம் ஆண்டு அத்திவரதர் பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.

இந்நிலையில், 12 ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த சனிக்கிழமை அத்திவரதர் சிலை மீண்டும் பாதாள அறையில் இருந்து வெளியே கொண்டுவரப்பட்டு, மார்ச் 1 (ஞாயிற்றுக்கிழமை) முதல் மார்ச் 10ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்காக வைக்கப்படும்.

நாள்தோறும் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரையும் மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையும் மக்கள் அத்திவரதரை தரிசனம் செய்யலாம் எனக் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

குறிப்புச் சொற்கள்