மதுரை: வீடுகளில் விலங்குகள், பறவைகளை வளர்க்க கட்டணம் விதிக்கப்படும் என மதுரை மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஏற்கெனவே வீடுகளில் பறவைகள், செல்லப்பிராணிகள் வளர்க்க கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை (பிப்ரவரி 27) நடந்த கூட்டத்தில் அதுதொடர்பான கட்டணம் குறித்து தெரிவிக்கப்பட்டது.
அதன்படி மாடு வளர்க்க 500 ரூபாயும் குதிரை வளர்க்க 750 ரூபாயும் ஆடு வளர்க்க 150 ரூபாயும் பன்றி வளர்க்க 500 ரூபாயும் கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது.
இதைத் தவிர நாய், பூனை வளர்க்க 750 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இத்தீர்மானங்கள் எப்போது அமலுக்கு வரும் என்பதை மாநகராட்சி விரைவில் அறிவிக்கும் எனக் கூறப்படுகிறது. வீடுகளில் பறவை, விலங்குகளை வளர்க்க கட்டணம் விதிக்கப்படும் என்ற தீர்மானத்தால் மதுரை மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.