சென்னை: என்டிஏ கூட்டணியில் இடம்பெற்றுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தனிச் சின்னத்தில் போட்டியிடும் என்று ஜிகே வாசன் அறிவித்துள்ளார்.
சென்னையில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை தமாகா தலைவர் ஜிகே வாசன் மற்றும் புதிய நீதிக் கட்சியின் ஏசி சண்முகம் உள்ளிட்டோர் சந்தித்தனர். இந்த சந்திப்புக்குப் பின் இரு கட்சிகளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் நாளை நண்பகலில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டம் நடக்கவுள்ளது.
இதற்காக தமிழ்நாட்டில் முகாமிட்டுள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், கூட்டணியை உறுதி செய்வதில் முழுமூச்சாய் இறங்கியுள்ளார். ஏற்கெனவே தேஜகூ கூட்டணியில் பாமக, அமமுக ஆகிய கட்சிகள் இணைந்துவிட்டன.
முன்னதாக, பொங்கல் தினத்தன்று, மாணிக்கம் தாகூர் திமுகவுடனான கூட்டணி குறித்து வெளியிட்டிருந்த எக்ஸ் பதிவால் திமுக தரப்பில் சலசலப்பை ஏற்படுத்தியது. தேர்தல் கூட்டாளிகள், ஆட்சியில் பங்குபெறும் கூட்டாளிகளே என அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
அதற்குப் பதில் அளிக்கும் வகையில், அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய திமுக மூத்த அமைச்சர் ஐ.பெரியசாமி, திமுக எப்போதும் தனித்துதான் ஆட்சி அமைக்கும் என்றும், ஆட்சியில் பங்கு தர வாய்ப்பே இல்லை என்றும் தெரிவித்திருந்தார்.

