சட்டப்பேரவையில் அமளி: அதிமுக உறுப்பினர்கள் இடைநீக்கம்

1 mins read
42cb7ad2-bc2a-44f9-8538-31b4e4b7ead2
சபாநாயகர் அப்பாவு. - படம்: தமிழக ஊடகம்

சென்னை: தமிழக சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்ட அதிமுக உறுப்பினர்களை ஒருநாள் இடைநீக்கம் செய்து பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.

தொடர் அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைத்து அதிமுக உறுப்பினர்களையும் பேரவை வளாகத்தில் இருந்து வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு உத்தரவிடப்பட்டது.

தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. கதர், கிராமத் தொழில்கள், வனம் மற்றும் கைத்தறித் துறையின் மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடைபெற்று வருகின்றன.

அப்போது, சட்டப்பேரவையில் கவன ஈர்ப்புத் தீர்மானத்தை தாக்கல் செய்ய அதிமுக உறுப்பினர்கள் முயன்றனர். அதனை பேரவைத் தலைவர் மறுத்ததால் அமளியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ”மரபுப்படி அவைத் தலைவரிடம் முன்னதாகவே அனுமதி பெற்றுத்தான் தீர்மானத்தை தாக்கல் செய்ய முடியும். மரபுப்படி தாக்கல் செய்தால் நாங்கள் பதிலளிக்க தயாராக இருக்கிறோம். தொலைக்காட்சியைப் பார்த்து தெரிந்துகொண்டதாக கூறமாட்டோம்” என்றார்.

அதிமுகவினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் ஒருநாள் கூட்டத்தொடரில் பங்கேற்க அவைத் தலைவர் தடை விதித்து உத்தரவிட்டார்.

பேரவையின் வளாகத்தில் நின்றவாறு அரசுக்கு எதிராக முழக்கமிட்ட அதிமுகவினரை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் அப்பாவு உத்தரவிட்டார்.

குறிப்புச் சொற்கள்