சென்னை: 24-25ஆம் ஆண்டிற்கு ஒன்பது தமிழறிஞர்களின் நூல்கள் நாட்டுடைமை செய்து நூலுரிமைத் தொகையாக ரூ. 90 லட்சத்தை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
வாழும் தமிழறிஞர்களான முனைவர் ஆறு.அழகப்பன் , முனைவர் ராமலிங்கம், மறைந்த தமிழறிஞர்களான முனைவர் சோ.சத்தியசீலன், மா.ரா. அரசு, பாவலர் ச.பாலசுந்தரம், க.ப.அறவாணன், திருநாவுக்கரசு, முனைவர் இரா.குமரவேலன், கவிஞர் கா.வேழவேந்தன் ஆகியோர் நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.
சென்னை கலைவாணர் அரங்கில் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் நவம்பர் 18ஆம் தேதி திங்கட்கிழமை நடைபெற்ற விழாவில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நூலுரிமைத் தொகையை வழங்கினார்.