குன்னூர்: நீலகிரி மாவட்டத்தின் கன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாகத் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (16-10-2024) இரவு பெய்த மழை காரணமாக மூன்று இடங்களில் ரயில் பாதையில் பாறைகள் விழுந்தன. அதையடுத்து குன்னூரிலிருந்து ஊட்டிக்குச் செல்ல வேண்டிய மலை ரயில் சேவை நிறுத்தப்பட்டது. இதன் காரணமாக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் காத்திருக்க நேரிட்டது.
ரயில் பாதைகளில் விழுந்து கிடக்கும் பாறைகளை அப்புறப்படுத்தும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் பின்னர் ரயில் சேவை தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.