திருவள்ளூர்: மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பாக, திருவள்ளூர் தொகுதியில் போட்டியிட்ட சசிகாந்த் செந்தில், ஒட்டுமொத்த தமிழகத்திலும் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அவரை எதிர்த்து தேமுதிக, பாஜக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உட்பட 14 பேர் போட்டியிட்டனர். அனைவரும் தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.
வாக்கு எண்ணிக்கையின் முடிவில், 7,96,956 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் சசிகாந்த். இரண்டாம் இடம் பிடித்த பாஜக வேட்பாளர் பாலகணபதியைவிட சசிகாந்த் 5,72,155 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார்.
சசிகாந்த் ஐஏஎஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று கர்நாடகாவில் பணியாற்றி வந்தார். அங்கு சித்ரதுர்கா, ராய்ச்சூர் மாவட்டங்களில் ஆட்சியராகப் பணியாற்றிய அனுபவம் உள்ளவர். கடந்த 2019ஆம் ஆண்டு அவர் அரசுப்பணியைத் துறந்தார்.


