கஞ்சா, மதுப்பழக்கம் வாழ்க்கையை நரகமாக்கிவிடும்: ரஜினி

கஞ்சா, மதுப்பழக்கம் வாழ்க்கையை நரகமாக்கிவிடும்: ரஜினி

1 mins read
8dcc53a4-cc86-4852-b78b-e1b7b6865549
ரனினிகாந்த். - படம்: ஏஎன்ஐ

சென்னை: கஞ்சா, மதுப்பழக்கத்துக்கு இளையர்கள் அடிமையாகிவிடக் கூடாது என நடிகர் ரஜினிகாந்த் அறிவுறுத்தி உள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இளையர்கள் படிக்கும் வயதில் கல்வியில் மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்த வேண்டும் என்றார்.

கல்வி கற்க கிடைத்த நேரத்தை வீணடித்துவிட்டால் வாழ்க்கையில் மிகவும் சிரமப்பட வேண்டியிருக்கும் என்றும் அனைவரும் உடல்நலத்திலும் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

“மது, கஞ்சா ஆகியவற்றுக்கு அடிமையாகிவிட்டால் வாழ்க்கை கெட்டுவிடும். உங்களை மட்டுமல்லாமல், சுற்றி இருப்பவர்களையும் பாதிக்கும். போதைப் பழக்கமுள்ள நண்பர்களிடம் இருந்து விலகியே இருங்கள்,” என்றார் ரஜினி.

அவர் தற்போது நடித்துவரும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு மேலும் சில நாள்கள் நீடிக்கும் என்றும் தன் நண்பர்கள் கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதனிடையே, விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு, தாம் பதிலளிக்க விரும்பவில்லை என்று திட்டவட்டமாகக் கூறினார் ரஜினி.

மேலும், இளையர்கள் நடிகர்களின் வாகனத்தைப் பின்தொடரக் கூடாது என்றும் அடிபட்டால் பெரும் பாதிப்புகள் ஏற்படும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

குறிப்புச் சொற்கள்