முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கு: மார்க்கண்டேயன் மனு தள்ளுபடி

முதல்வரை அவதூறாகப் பேசிய வழக்கு: மார்க்கண்டேயன் மனு தள்ளுபடி

1 mins read
d0a152c4-db9e-467b-9e77-c227884103e6
விளாத்​தி​குளம் தொகுதி திமுக எம்​எல்ஏ மார்க்​கண்​டேயன் ஜூலை 20ஆம் தேதி கைது செய்​யப்​பட்டார். - படம்: இந்து தமிழ் திசை

தூத்துக்குடி: தமிழக முதல்​வர் விஜய் குறித்து அவதூறாகப் பேசிய எம்​எல்​ஏ​ மார்க்​கண்​டேயன் கைது செய்​யப்​பட்டு சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்ளார்.

அவரை விடுதலை செய்யக்கோரி அளித்த மனுவைத் தூத்​துக்​குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றம் வியாழக்கிழமை (ஜூன் 30) தள்​ளு​படி செய்​தது.

கோவில்​பட்​டி​யில் ஜூலை 18ஆம் தேதி நடை​பெற்ற திமுக பொதுக்​கூட்​டத்​தில் முதல்​வர் விஜய் குறித்து அவதூறாக​வும் மிரட்​டும் வகை​யிலும் பேசி​ய​தாகக் கூறி, விளாத்​தி​குளம் தொகுதி திமுக எம்​எல்ஏ ஜி.​வி.​மார்க்​கண்​டேயன் ஜூலை 20ஆம் தேதி கைது செய்​யப்​பட்​டு, பாளை​யங்​கோட்டை மத்​திய சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளார்.

அவரது விடுதலை மனுவை தூத்​துக்​குடி முதலா​வது குற்​ற​வியல் நீதித்​துறை நடு​வர் மன்​றம் கடந்த 22ஆம் தேதி தள்​ளு​படி செய்​தது.

இதையடுத்​து, சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்ட விடுதலை மனு மீதான தீர்ப்பை உயர் நீதி​மன்​றம் ஒத்​தி​வைத்​துள்​ளது.

அதையடுத்து, தூத்​துக்​குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தி​லும் மார்க்​கண்​டேயனுக்கு விடுதலை கேட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது.

அந்த மனு விசா​ரணைக்கு வந்​தபோது இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிபதி சுபாதே​வி, விடுதலை மனுவைத் தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டார்​.

குறிப்புச் சொற்கள்