சென்னை: ஜனவரி மாதம் கிட்டத்தட்ட 87 லட்சம் பேர் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளது புதிய சாதனையாகப் பதிவாகி உள்ளது.
அந்த மாதம் முழுவதும் 86,99,344 பயணிகள் மெட்ரோ ரயில்களைப் பயன்படுத்தியதாக சென்னை மெட்ரோ ரயில் (CMRL) நிர்வாகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தைப்பொங்கல் திருநாளுக்கு முன்னர் ஜனவரி 10ஆம் தேதி மட்டும் 3.60 லட்சம் பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்ததாக அது கூறியுள்ளது.
அந்த மாதத்திலேயே அன்றைய தினம்தான் அதிகமான பயணிகள் மெட்ரோ ரயில்களில் சென்றனர்.
மேலும், 2024ஆம் ஆண்டு முழுவதும் சென்னை மெட்ரோ ரயில்களில் 10.5 கோடிக்கும் அதிகமானோர் பயணம் செய்ததாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தனது அறிக்கையில் குறிப்பிட்டு உள்ளது.

