சென்னை: 2024 ஆகஸ்ட் மாதத்தில் 95.43 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இந்தப் பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான எண்ணிக்கையில் இதுவே அதிக எண்ணிக்கை ஆகும்.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பக தன்மையான பாதுகாப்பான வசதியை வழங்கி வருகிறது.
அந்த வகையில் 2024ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை விட ஆகஸ்ட் மாதத்தில் 8,606 பயணிகள் மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணித்துள்ளனர்.
2024 ஜனவரி மாதத்தில் 8, 463,384 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 8 615,008 பயணிகளும், மார்ச் மாதத்தில் 8 682,457 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 8, 087,712 பயணிகளும், மே மாதத்தில் 8,421,072 பயணிகளும், ஜூன் மாதத்தில் 8,433,837 பயணிகளும், ஜூலை மாதத்தில் 9, 535,019 பயணிகளும் மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் 9,543,625 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

