சென்னை ஒன் செயலி: பொதுப் போக்குவரத்தில் ஒரு ரூபாய்க்குப் பயணச் சீட்டு!

1 mins read
ced2d462-0a21-4d6d-9f92-c30e8a0e559a
சென்னை ஒன் செயலி. - படம்: இந்திய ஊடகம்

சென்னை: சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA), சென்னையில் பொதுப் போக்குவரத்தை ஊக்குவிக்கும் வகையில், ‘சென்னை ஒன்’ செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தச் செயலியை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இந்தச் செயலி மூலம் மாநகரப் பேருந்து, மெட்ரோ ரயில், புறநகர் ரயில்களில் பயணம் செய்வதற்கான பயணச் சீட்டைப் பெற முடியும். மேலும் வெவ்வேறு போக்குவரத்துச் சேவைகளைப் பயன்படுத்துவோருக்கு ஒரே டிக்கெட்டைப் பெறும் வசதி உள்ளது.

சென்னை ஒன் செயலியைப் பதிவிறக்கம் செய்து, மேற்கண்ட போக்குவரத்துச் சேவைகளில் ஏதேனும் ஒன்றில் முதல்முறையாகப் பயணம் செய்பவர்களுக்கு ஒரு ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படும்.

கூகுள் பே, ஃபோன் பே போன்ற BHIM UPI அல்லது Nayi UPI மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு மட்டுமே இந்தச் சலுகை பொருந்தும். இந்தச் சலுகை குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும் என CUMTA தெரிவித்துள்ளது.

நாட்டிலேயே முதல்முறையாக உருவாக்கப்பட்ட இந்தச் செயலியை தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளில் பயன்படுத்தலாம்.

குறிப்புச் சொற்கள்