சென்னை: மறைந்த இசையமைப்பாளர் காலஞ்சென்ற எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரை சென்னையில் பட்டினப்பாக்கம் பகுதியில் உள்ள டிமான்டி சாலைக்கு சூட்ட, சென்னை மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
திங்கட்கிழமை (ஜூன் 30) நடைபெற்ற மாநகராட்சிக் கூட்டத்துக்கு சென்னை மேயர் ஆர். பிரியா தலைமையேற்றார். அப்போது, டிமான்டி சாலைக்கு எம்.எஸ்.விஸ்வநாதன் பெயரைச் சூட்டுவது தொடர்பாக, அனைத்து உறுப்பினர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.
விஸ்வநாதனுக்கு நான்கு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர்.
ஃபிலிம்பேர் வாழ்நாள் சாதனையாளர் விருது, கலைமாமணி உள்ளிட்ட நிறைய விருதுகளைப் பெற்றுள்ளார்.
தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழிகளில் 1,700 திரைப்படங்களுக்கு இசையமைத்து, சில படங்களில் நடித்தும் உள்ளார்.