சென்னை: தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தோல்வி அடைந்தார்.
ஐந்து ஆண்டுகளாக மாநிலத்தின் முதலமைச்சராக பதவி வகித்த ஸ்டாலினுக்கு மக்கள் இம்முறை எம்எல்ஏ பதவிகூட அளிக்கவில்லை.
தமிழகத்தின் நட்சத்திரத் தொகுதிகளின் ஒன்றைன சென்னை கொளத்தூர் தொகுதியில் ஏறக்குறைய 9,192 வாக்குகள் வித்தியாசத்தில் ஸ்டாலின் தோல்வி அடைந்துள்ளார்.
தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு மொத்தம் 82,110 வாக்குகளை பெற்றுள்ளார். மு.க.ஸ்டாலின் 72,988 வாக்குகளை பெற்றுள்ளார்.
திரு ஸ்டாலின் 1984ஆம் ஆண்டு முதன்முறையாக தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டபோது சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில் தோல்வியே கிடைத்தது.
1989ல் அதே தொகுதியில் போட்டியிட்டு முதல் முறையாக எம்எல்ஏ ஆனார். 1991ல் மீண்டும் தோல்வியே மிஞ்சியது.
எனினும், பிறகு 1996, 2001, 2006 என்று தொடர்ந்து மூன்று முறை ஆயிரம் விளக்கு தொகுதியில் அவர் வெற்றி பெற்றார்.
கடந்த 2011, 2016 ஆகிய தேர்தல்களில் சென்னை கொளத்தூர் தொகுதியில் வெற்றி பெற்ற அவர், தற்போது மூன்றாவது முறையாக அங்கு போட்டியிட்டுள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர், துணை முதல்வர், முதல்வர் எனத் தொடர்ந்து அரசியல் களத்தில் அடுத்தடுத்த உயரங்களை எட்டிப்பிடித்த அவர், அதிக அறிமுகம் இல்லாத தவெக வேட்பாளரிடம் தோல்வி கண்டுள்ளார்.

