சி.வி.சண்முகம் அணியினர் சந்தித்த முதல்வர் விஜய்

சி.வி.சண்முகம் அணியினர் சந்தித்த முதல்வர் விஜய்

1 mins read
75b67d2e-8142-478b-b3cd-0c3e98f874f7
சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்துக்குச் சென்ற முதல்வர் விஜய்யை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றனர். - படம்: இந்து தமிழ் திசை

சென்னை: தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள திரு விஜய் செவ்வாய்க்கிழமை (மே 12) அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் அணியினரைச் சந்தித்துப் பேசினார். இது அதிமுகவில் சலசலப்பைக் கூட்டியுள்ளது. சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள சி.வி.சண்முகம் அலுவலகத்துக்குச் சென்ற முதல்வர் விஜய்யை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வரவேற்றனர். அந்தச் சந்திப்பின்போது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், சி.விஜயபாஸ்கர், கே.பி.அன்பழகன், இரா.காமராஜ் மற்றும் அதிமுக எம்எல்ஏக்கள் முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தனர்.  முதல்வர் விஜய்யும் அதிமுக முன்னாள் அமைச்சர்களுக்குப் பூங்கொத்து கொடுத்து மரியாதை செய்தார். நடந்து முடிந்த தேர்தலில் 47 இடங்களில் மட்டுமே வென்ற அதிமுக மூன்றாவது இடத்தைப் பிடித்தது.  இதன் காரணமாக அக்கட்சி எடப்பாடி பழனிசாமி அணி, சி.வி.சண்முகம் -எஸ்.பி.வேலுமணி அணி என இரு பிரிவுகளாகச் செயல்படுகிறது.  பழனிசாமியை சட்டமன்றக் குழுத் தலைவராக்க 17 எம்எல்ஏக்களும் வேலுமணியைத் தலைவராக்க 30 எம்எல்ஏக்களும் சபாநாயகரிடம் கடிதம் அளித்துள்ளனர். சட்டமன்றத்தில் புதன்கிழமை (மே 13) முதல்வர் விஜய் தலைமையிலான அரசு, தனக்கான பெரும்பான்மையை நிரூபிக்க உள்ளது. 

இந்தச் சூழலில் அதிமுகவின் ஒரு தரப்பு அவரை ஆதரித்துள்ளதால், அவருக்கான பெரும்பான்மை எண்ணிக்கை அதிகரிப்பது உறுதியாகியுள்ளது.

குறிப்புச் சொற்கள்

தொடர்புடைய செய்திகள்