மதுரையில் சித்திரைத் திருவிழா: பக்தர்களின் பாதுகாப்புக்குப் புதிய செயலி அறிமுகம்

1 mins read
6cacb550-b268-4766-b88c-097f539d2527
கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக, கள்ளழகர் ஆற்றில் இறங்குவார் எனக் கருதப்படுகிறது.  - படம்: இணையம்

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழாவின் முக்கிய அங்கமான, கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி திங்கட்கிழமை (மே 12) அதிகாலையில் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு, 1.5 மில்லியனுக்கும் அதிகமான பக்தர்கள் திருவிழாவுக்கு வருகையளிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பக்தர்களின் பாதுகாப்பைக் கருதி ‘வைகை வீரன்’ என்ற புகார் செயலியை மதுரை காவல் துறையினர் அறிமுகம் செய்துள்ளனர்.

மக்கள் எந்த இடத்தில் இருந்தாலும் இதன்மூலம் காவல்துறையின் உதவியை நாடலாம் என்று செயலியை அறிவித்த காவல்துறை குறிப்பிட்டது.

புகார் கொடுக்க குறியீட்டை தங்கள் திறன்பேசி மூலம் வருடி, செல்போன் எண் மற்றும் கியூஆர் ஸ்கேன் மேல் கொடுத்த எண்ணைத் தட்டச்சு செய்து அல்லது குரல் பதிவு, எழுத்து, குறுஞ்செய்தி மூலம் புகார் தெரிவிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய விழாவின் முத்தாய்ப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக, கள்ளழகர் ஆற்றில் இறங்குவார் எனக் கருதப்படுகிறது. பக்தர்கள் பாதுகாப்பாக இறை தரிசனம் செய்யும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

குறிப்புச் சொற்கள்