தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் விரிந்து களைகட்டும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் திளைக்க சுற்றுப்பயணிகள் பல்வேறு இடங்களுக்குச் சென்று மகிழலாம். இவற்றில் ஐந்து வண்ணமயமான தலங்களின் பட்டியல், உங்களுக்காக.
புதுச்சேரி
இந்திய, பிரஞ்சு பண்பாடுகள் நயமாகக் கலக்கும் நகரமாகப் புதுச்சேரி திகழ்கிறது. மார்கழிக் குளிரில் மனதிற்கு இதமூட்டும் கடற்கரைப் பகுதியில் பல்வண்ணக்காட்சிகள் ஏராளம். பழம்பெரும் தேவாயலங்களிலும் அவற்றைச் சுற்றியுள்ள பகுதியிலும் அலங்காரங்கள் சிறப்பாகப் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை
சாந்தோம் பசிலிக்கா தேவாலயத்தில் கூட்டுப் பிரார்த்தனையுடன் கடற்கரை உணவகங்களில் அறுசுவை விருந்து, கேளிக்கை ஆட்டங்கள் ஆகியவை உல்லாச உணர்வைத் தருகின்றன.
வேளாங்கன்னி
தமிழகத்தில் வேளாங்கன்னி சிறிய கடற்கரை நகரம் என்றாலும் இனிய இசை, வாணவேடிக்கை ஆகியவை இயேசு கிறிஸ்து பிறப்பு நாளில் ஆழமான அன்புணர்வில் திளைப்போரை இன்புறச் செய்யும்.
கன்னியாகுமரி
பல்வேறு வீடுகளிலும் வீதிகளிலும் கிறிஸ்துமஸ் கீதங்கள் ஒலிக்கும். இதமிகு தென்றலுடல் அறுசுவை விருந்தின் நறுமணமும் இரண்டறக் கலக்கும்.
கொடைக்கானல்
கூட்டக் கொண்டாட்டத்தில் நாட்டம் இல்லாதோர் இங்கு வந்து, இயற்கைக்கு இடையேயும் உணவுண்டு அகங்குளிர மகிழலாம்.

