சென்னை: இந்திய அளவில் சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 18) நடைபெற்ற சென்னை பன்னாட்டுப் புத்தகத் திருவிழா 2026 நிறைவு விழாவில் பங்கேற்றுப் பேசிய அவர், “குறிப்பிட்ட இந்திய மொழிகளில் வெளிவரும், தலைசிறந்த இலக்கியப் படைப்புகளுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில், ஆண்டுதோறும் தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படும்,” என்று தெரிவித்தார்.
முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராட்டிய மொழிகளில் வெளிவரும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும்.
விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும். படைப்புகளின் இலக்கிய தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும் என்று அவர் கூறினார்.
கடந்த 2025ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருதுகள் இறுதி செய்யப்பட்டு, அறிவிக்கப்பட இருந்த நிலையில், விருது அறிவிக்கும் நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டுள்ளது. விருது விழா நடக்குமா என்றும் தெரியவில்லை.
கலை இலக்கிய விருதுகளில் கூட அரசியல் குறுக்கீடு ஆபத்தானது. முதல்கட்டமாக, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராட்டிய மொழிகளில் வெளிவரும் தலைசிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் செம்மொழி இலக்கிய விருது வழங்கப்படும்.
விருதுடன் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்படும். படைப்புகளின் இலக்கிய தரத்தையும், வெளிப்படையான தேர்வு முறையையும் உறுதி செய்யும் விதமாக புகழ்பெற்ற எழுத்தாளர்கள், விருதாளர்கள் அடங்கிய குழு ஒவ்வொரு மொழிக்கும் தனியே அமைக்கப்படும். இத்தகைய சூழலில், தமிழ்நாடு அரசு ஆக்கபூர்வமான, உரிய எதிர்வினையை ஆற்றவேண்டும் என்று, பல்வேறு எழுத்தாளர்களும், கலை இலக்கிய அமைப்புகளைச் சார்ந்தோரும் கோரிக்கை விடுத்தனர் என்று திரு ஸ்டாலின் தெரிவித்தார்.

